உரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்!

Sharing is caring!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய உரிய காலஎல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இன்றைய அமர்வில் இலங்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.

ஐ.நா. பிரேரணையை நடைமுறைப்படுத்தாமை, நல்லிணக்க பொறிமுறை தாமதிக்கப்படுகின்றமை, நிலைமாறுகால நீதி பொறிமுறையை செயற்படுத்தாமை தொடர்பாக ஐ.நா. ஆணையாளர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தநிலையில் இதுதொடர்பாக கருத்து வெளியிடும் போதே கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

வழங்கப்பட்டுள்ள கால எல்லைக்குள் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக சமர்ப்பித்த உத்தியோகபூர்வ அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares