மரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை

Sharing is caring!

இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் குற்றங்களை கையாள்வது தொடர்பான இலங்கையின் நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கையை, அதன் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் இன்று (புதன்கிழமை) சமர்ப்பித்தார். அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்கள் அமைப்பது அவசியமானது எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

மூன்று தசாப்தகால யுத்தத்தை சந்தித்த இலங்கை தற்போது நிலையான சமாதானத்தை நோக்கிய செல்கின்றது.

இவ்வாறான நிலையில் மரண தண்டனையை மீண்டும் செயற்படுத்த முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென ஐ.நா. ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares