இலங்கைக்கு எதிரான பிரேரணை முன்மொழியப்பட்டபோது பா.ஜ.க வேடிக்கை பார்த்தது – சீமான்

Sharing is caring!

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்று முன்மொழியப்பட்டபோது, பா.ஜ.க வேடிக்கை பார்த்ததாகவும், அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சீமான் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  சிங்களவர் இராமனின் வம்சாவளியினர் எனவும் தமிழர்கள் இராவணனின் வம்சாவளியினர் எனவும் கூறி நாம் இராமனின் வம்சாவளியினருக்கு துணைநிற்கவேண்டும் என பா.ஜ.க கூறிய பதிவுகள் காணப்படுகின்றன.

2ஜி.பி ஊழலுக்கு எதிராக ஒரு மாதமும் முப்பது நாட்களும் நாடாளுமன்றத்தை முடக்கிய வலிமையான எதிர்க்கட்சி இலங்கை தமிழரின் இனப்படுகொலை தொடர்பாக ஏன் போராடவில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares