தமிழர்களின் உயிரழிவை வரவேற்றவர்களுக்கு கால அவகாசம் வழங்குவதில் பயனில்லை – விக்கி

Sharing is caring!

தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உயிர் அழிவையும், கொடூரத்தையும் வரவேற்றவர்களாக இலங்கை அரசாங்கம் விளங்குகின்றது.

இந்நிலையில், ஐ.நா. பிரேரணையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதில் பயனில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வட. மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பிரேரணையை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பான தனது நிலைப்பாட்டை யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐ.நா. பிரேரணையை நிறைவேற்றுவதற்கு கடந்த நான்கு வருடங்களாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக பிரேரணையை நடைமுறைப்படுத்த மாட்டோம் என உயர் பதவி வகிப்பவர்கள் கூறி வருகின்றனர்.

இன்றும் கொலையாளிகளை பாதுகாக்கும் வகையிலேயே இலங்கை அரசாங்கத்தினர் செயற்பட்டு வருகின்றனர். இறுதி யுத்தத்தின்போது இழைக்கப்பட்டது போர்க்குற்றம் அல்ல என்றும், அது போர் வீரர்களின் துணிச்சல் மிக்க வீரம் என்ற நிலைப்பாட்டிலேயே பலரும் காணப்படுகின்றனர்.

எனவே, இத்தருணத்தில் யார் பிரேரணையை நடைமுறைப்படுத்த போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares