அல்ஜீரியாவில் உடனடி அரசியல் மாற்றம் வேண்டும்: மக்கள் கோரிக்கை

Sharing is caring!

அல்ஜீரிய ஜனாதிபதியின் அப்துலசீஸின் விட்டுக்கொடுப்பை அடுத்து உடனடியாக மாற்றம் ஒன்றை கொண்டு வருமாறு அல்ஜீரிய மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அல்ஜீரிய ஜனாதிபதி அப்துலசீஸ் பதவி விலக வேண்டும் என  அல்ஜீரியர்கள்  ஆர்ப்பாட்டங்களை  முன்னெடுத்து வந்த நிலையில், தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்திருந்தார். இதனால்  அல்ஜீரியர்கள் மிகுந்த சந்தோசமடைந்துள்ளனர்.

இந்நிலையில் உடனடியாக அரசியலில் மற்றம் ஒன்றைக் கொண்டு வருமாறு அல்ஜீரியர்கள் கோரியுள்ளனர்.

82 வயதான ஜனாதிபதி அப்துலசீஸ் 5ஆவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்ததை அடுத்து அதற்கு எதிராக அந்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்திருந்தன.

ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததோடு பலரும் காயமடைந்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் போட்டியிட்டு தான் வெற்றிபெற்றால் இரண்டாவது முறையாகவும் ஒரு தேர்தலை நடத்துவதாக அவர் தெரிவித்திருந்தார். அர்த்தமற்ற அவரது பதிலினால் மக்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் எதிர்வரும்காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares