இலங்கையின் பிரபல இசையமைப்பாளர் விளக்கமறியல்!

பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கிரில்லவெல பிரதேசத்தில் இன்று(செவ்வாய்கிழமை) மஞ்சள் கடவையால் பாதையை கடக்க முற்பட்ட பெண் மீது ஜனநாத் வரகாகொட செலுத்திய கார் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜனநாத் வரகாகொட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போதே அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கடவத்தை பிரதேசத்தைச் ​சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *