மசூத் அசார் விவகாரம் -பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் – சீனா

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் பேச்சு வார்ததை மூலமே தீர்வு காண முடியும் என சீனா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி இந்த பரிசீலனை எடுத்துக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டன. இந்த நேரத்தில் மேற்கண்ட கருத்தை சீனா கூறியுள்ளது.

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க, ஐ.நா.வில் பல முறை முயற்சித்தும், சீனாவின் தலையீட்டால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. எனினும் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான நிலைப்பாட்டை சீனா இன்னும் அறிவிக்கவில்லை.

ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

இந்த நிலையில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில், பேச்சுவார்த்தைகளின் மூலமே ஆக்கப்பூர்வமான தீர்வை காண முடியும் என்று சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *