30/1 தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் – இளங்களுக்கு மேலும் நெருக்கடியாக பிரித்தானியா- ஜேர்மன் புதிய தீர்மானம்

Sharing is caring!

30/1 தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பிரித்தானியாவும், ஜேர்மனும் புதிய தீர்மானமொன்றை முன்வைத்துள்ளது.

இப்புதிய தீர்மானம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் பேரவையில் நேற்று (திங்கட்கிழமை) முன்வைக்கப்பட்டுள்ளது.

‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் இத்தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா, ஜேர்மனுடன் இணைந்து இலங்கை தொடர்பான இத்தீர்மானத்தை கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன.

இத்தீர்மானத்திற்கமைய 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் விரிவான அறிக்கை ஒன்றை 2021 மார்ச் மாதம், சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இது குறித்து பேரவையில் விவாதம் ஒன்று நடத்தப்படும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை எடுத்துள்ள முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்புதிய தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares