நிரவ் மோடியின் வழக்கில் புதிய குற்றப்பத்திரிகை..!

Sharing is caring!

நிதி மோசடி வழக்கில் தலைமறைவாகியிருக்கும் இந்திய தொழிலதிபர் நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமுலாக்கத்துறை புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

அதில், நிரவ் மோடியின் மனைவி அமி, பணத்தை கையாண்ட விதம் குறித்து கூறப்பட்டுள்ளது. புதிய ஆதாரங்களையும், தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் புதிய குற்றச்சாட்டுகளையும் அமுலாக்கத்துறை கூறியுள்ளது.

இந்த குற்றபத்திரிகையை நேற்று (திங்கட்கிழமை) மும்பையில் உள்ள கறுப்புப்பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அமுலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.

பஞ்சாப் தேசிய வங்கியில் இந்திய மதிப்பில் 13 ஆயிரம் கோடிக்கும் அதிகம் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.

இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமுலாக்கத்துறை வழக்குத்தாக்கல் செய்து விசாரணைகளை நடத்தி வருகிறது. இதன் முதல் குற்றப்பத்திரிகை கடந்த ஆண்டு மே மாதம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares