அடுத்த தேர்தலில் போட்டியிட போவதியில்லை: அல்ஜீரிய ஜனாதிபதி

Sharing is caring!

அல்ஜீரிய ஜனாதிபதி அப்துலசீஸ்கக்கு எதிராக அல்ஜீரியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்துவரப்படும் நிலையில் தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

தமது நாட்டினர் உட்பட பிரான்சில் வசிக்கும் அல்ஜீரிய மக்களும் அவருக்கு எதிராக போராடி வரும் நிலையில் நேற்று (திங்கட்கிழமை) அவர்  இதனை தெவித்துள்ளார்.

82 வயதான ஜனாதிபதி அப்துலசீஸ் 5 வது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்ததை அடுத்து அதற்கு எதிராக அந்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததோடு பலரும் காயமடைந்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் போட்டியிட்டு தான் வெற்றி பெற்றால் இரண்டாவது முறையாகவும் ஒரு தேர்தலை நடத்துவதாக அவர் தெரிவித்திருந்தார். அர்த்தமற்ற அவரது பதிலினால் மக்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில்  ஏப்ரலில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஜனாதிபதி அப்துலசீஸ் அண்மையில் சுவிட்ஸர்லாந்தில் உள்ள ஸ்விஸ் சிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற சென்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares