போா் நிறைவடைந்து 10 வருடங்கள் – தமிழர்களுக்கு நீதி வழங்க ஐ.நா. தவறிவிட்டது!

Sharing is caring!

போா் நிறைவடைந்து 10 வருடங்களாகும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதில் ஐ.நா.சபை தொடா்ந்தும் கால தாமதத்தையே காட்டுவதாக முன்னாள் மாகாண அமைச்சா் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் 40வது கூட்டத்தொடா் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலமைச்சா் ஐ.நா செல்வதற்கான விசேட குழு ஒன்றிணை அமைத்து நாடுகள் மற்றும் மனித உாிமை அமைப்புக்களை சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை கூறவேண்டும்,

அதுமட்டுமல்லாமல் இலங்கை அரசாங்கம் ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. அல்லது நிறைவேற்ற தவறியி ருக்கின்றது என்ற உண்மையையும் கூறவேண்டும். அதனை புலம்பெயா் தமிழா்கள், தமிழக தமிழா்கள் ஆகியோருடன் இணைந்து

மேற்கொள்வதன் ஊடாகவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் கவனத்திற்கேனும் கொண்டு செல் ல முடியும் எனவும் அவா் கூறியுள்ளாா்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares