இராணுவம் வசமிருந்த மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு!

Sharing is caring!

வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் ஒரு தொகுதி இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் 972 ஏக்கர் அரச காணிகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 ஏக்கர் அரச காணிகளும் விடுவிக்கப்படவுள்ளன.

அத்தோடு, யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் 46.11 அரச காணிகளும் 63.77 தனியார் காணிகளும் விடுவிக்கப்படவுள்ளன.

வடக்கு கிழக்கில் இன்னும் 14,000 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், சிறிது சிறிதாக அவற்றை விடுவிக்கும் இலங்கை இராணுவம், தேசிய பாதுகாப்பு கருதி சில காணிகளை தம்வசம் வைத்துள்ளதாக கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

One thought on “இராணுவம் வசமிருந்த மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares